ஜனாதிபதி எமது பழைய நண்பர் என்பதால், நாங்கள் அவரை நகைப்புக்குள்ளாக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார சபையில் சண்டித்தனமான முறையில் உரையாற்றினார். எம்மை கேலிக்குள்ளாக்கினார். ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்தை நாங்கள் அவருக்கு வழங்குவோம். பிரதமர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டையே பொறுப்பேற்றதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது முற்றிலும் தவறானது. வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்றோம் என்று பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களிடம் குறிப்பிடுங்கள் முடிந்தால் எம்முடன் விவாதத்துக்கு வாருங்கள் தரவுகளுடன் விடயங்களை வெளிப்படுத்துகிறோம்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.