ஜெருசலேமில் பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நகரின் வடக்கு புறநகரில் உள்ள ராமோட் சந்திப்பில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தை நோக்கி இரண்டு “பயங்கரவாதிகள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பாதுகாப்பு அதிகாரியும் ஒரு குடிமகனும் பதில் தாக்குதல் நடத்தி, தாக்குதல்தாரிகளை “நடுநிலைப்படுத்தினர்” என்றும் இஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹமாஸ் தாக்குதலைப் பாராட்டினாலும், எந்தவொரு ஆயுதக் குழுக்களிடமிருந்தும் உடனடியாக எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஏராளமான அதிகாரிகள் குறித்த பகுதியில் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும், தடயவியல் குழுக்கள் ஆதாரங்களைச் சேகரிக்கும் அதே வேளையில், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுகள் அந்தப் பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.