டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய உளவுத் துறையில் வேலை; 394 காலியிடங்கள் – மாதம் ரூ.81,100/- சம்பளம்! IB Recruitment 2025

IB Recruitment 2025: நீங்கள் டிகிரி முடித்தவரா? மத்திய அரசில் உளவுத் துறையில் (IB) வேலை செய்ய ஆர்வமா? அப்படியெனில், உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! மத்திய அரசின் இந்திய உளவுத் துறை (Intelligence Bureau – IB), Junior Intelligence Officer Grade-II/ Tech பணிகளுக்கு காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 14.09.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கியமான விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் Intelligence Bureau (IB)
காலியிடங்கள் 394
பணிகள் Junior Intelligence Officer Grade-II/ Tech
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 14.09.2025
பணியிடம் தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mha.gov.in/

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Junior Intelligence Officer Grade-II/ Tech 394
மொத்தம் 394

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், மின்னணுவியல் (Electronics) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு (Electronics & Telecommunication) அல்லது மின்னணுவியல் மற்றும் தொடர்பு (Electronics & Communication) அல்லது மின்னணுவியல் மற்றும் மின்சாரம் (Electrical & Electronics) அல்லது தகவல் தொழில்நுட்பம் (IT) அல்லது கணினி அறிவியல் (CS) அல்லது கணினி பொறியியல் (Computer Engineering) அல்லது கணினி பயன்பாடுகளில் (Computer Applications) டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், மின்னணுவியல் (Electronics) அல்லது கணினி அறிவியல் (CS) அல்லது இயற்பியல் (Physics) அல்லது கணிதத்தில் (Mathematics) அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், கணினி பயன்பாடுகளில் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree in Computer Applications) பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

பிரிவு (Category) வயது வரம்பு தளர்வு (Age Relaxation)
SC/ ST (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர்) 5 ஆண்டுகள்
OBC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) (பொதுப் பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள்) 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள்) 15 ஆண்டுகள்
PwBD (OBC) (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள்) 13 ஆண்டுகள்
Ex-Servicemen (முன்னாள் ராணுவத்தினர்) அரசு கொள்கைகளின்படி (As per Govt. Policy)

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,500 – 81,100/- சம்பளம் வழங்கப்படும்.

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவை:

  • Tier-I (Online Test)
  • Tier-II (Written Exam (Descriptive type)) 
  • Tier-III (Interview/Personality test))

Exam Centers in Tamilnadu: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்

  • பெண்கள்/ST/SC/முன்னாள்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.550/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.650/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.08.2025 முதல் 14.09.2025 தேதிக்குள் https://www.mha.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply