டிகிரி முடித்தவர்களுக்கு ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவியாளர் வேலை – ரூ.20,000 முதல் ரூ.66,000 வரை சம்பளம்! RITES Recruitment 2026

RITES Recruitment 2026: மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனமானது, தற்போது காலியாக உள்ள 15 Assistant (HR) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளில் சேர ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் 27.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின் மூலம், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார், தேவையான கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது போன்ற முழுமையான விவரங்களை அறியலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம்
RITES (Rail India Technical and Economic Service)
காலியிடங்கள் 15
பணி Assistant (HR)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 27.04.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rites.com/

ரயில்வே துறை RITES நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Assistant (HR) 15
மொத்தம் 15

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தின் Assistant (HR) (உதவியாளர் (HR)) பணிக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் ஏதேனும் பட்டம் (Graduation in Any Degree) தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்:

ரயில்வே துறையின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தின் உதவியாளர் (HR) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத் தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கலாம். இது தொடர்பான மேலும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு தளர்வு (Age Relaxation)

பிரிவு (Category) வயது வரம்பு தளர்வு (Age Relaxation)
SC / ST (பட்டியலினத்தவர் / பழங்குடியினர்) 5 ஆண்டுகள்
OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) (மாற்றுத்திறனாளிகள் – பொது / பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர்) 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) (மாற்றுத்திறனாளிகள் – பட்டியலினத்தவர் / பழங்குடியினர்) 15 ஆண்டுகள்
PwBD (OBC) (மாற்றுத்திறனாளிகள் – இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 13 ஆண்டுகள்

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தின் உதவியாளர் (HR) பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000-ரூ.66,000/- சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே துறை RITES நிறுவனம் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Written Test (எழுத்துத் தேர்வு)
  2. Document Scrutiny (ஆவணச் சரிபார்ப்பு)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • பட்டியல் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் (SC), முன்னாள் ராணுவத்தினர் (EX-s), மாற்றுத்திறனாளிகள் (PWD) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026

ரயில்வே துறை RITES நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.03.2026 முதல் 27.04.2026 தேதிக்குள் https://rites.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நன்றி

Leave a Reply