நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் பட்சத்தில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் எரிபொருள் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.
ரஷியாவிடம் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்து இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post டிரம்பின் வர்த்தகப் போர் தொடர்கிறது – சீனாவுக்கும் 100% வரிவிதிப்பு! appeared first on Global Tamil News.