டெல்லி, ரோஹினி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு பயிற்சி சிகிச்சை நிலையத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (14) தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர் 8 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 7 ஆம் திகதி, ஒரு சிகிச்சை அமர்விலிருந்து திரும்பியபோது தனது மகளிடம் அசாதாரண நடத்தையைக் கவனித்த சிறுமியின் தாய் சந்தேகப்பட்டதை அடுத்து, இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டில், பேச்சு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆகஸ்ட் 19 முதல் இந்த மையத்தில் 45 நிமிட சிகிச்சை அமர்வுகளில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விடயம் குறித்து டெல்லி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.