ட்ரம்பிற்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு இன்று, வாஷிங்டனில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி, மற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் இடையிலான கலந்துரையாடல்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தம், தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி இன்று வாஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரும் ஜெலன்ஸ்கியோடு இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் டோன்ஸ்க் பகுதியில் சுமார் 70 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அந்த பிராந்தியம் முழுவதையும் ரஷ்யா சொந்தம் கொண்டாடுகிறது. போரை நிறுத்த டோன்ஸ்க் பகுதியை முழுமையாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரஸ்ய ஜனாதிபதி புதின் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் டோன்ஸ்க் பகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என உக்ரைனுக்கு ஆதரவான ஐரோப்பிய நாடுகள் கூட்டாக தீர்மானித்துள்ளன. மேலும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என ரஸ்ய ஜனாதிபதி புதின் நிபந்தனை விதித்துள்ளார். இதனையும் ஏற்றுக் கொள்ள முடியாதென உக்கிரேன் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தகது.

 

நன்றி

Leave a Reply