“டொனால்ட் ட்ரம்ப் 79 வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏன் முடியாது. மகிந்தவுக்கும் 79 வயது தான்.நாட்டை காப்பாற்றிய தலைவருக்கு இவ்வாறான நிலை கலையளிக்கிறது.
எனது மாமாவின் கேம்பிரிஜ் காரில் 1976 ஆம் ஆண்டு பெலியத்தவில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னுடன் தான் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாங்கள் இரத்தம் பந்தம் கொண்டவர்கள்.தென்பகுதியில் பிறந்த நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் அல்ல. நாங்கள் விழவும் மாட்டோம், எங்களை வீழ்த்தவும் முடியாது. நன்றியுணர்வுள்ள மனிதனாக அவரை பார்க்க வந்தேன். நான் மகிந்த ராஜபக்சவை நான் என்றும் குறை கூறியதில்லை. அவர் எடுக்கும் எந்த தீர்மானத்திற்கும் நான் தயாராக உள்ளேன். நாங்கள் பெலியத்தவில் ஒன்றாக தான் இருந்தோம்.எனது அரசியல் வாழ்க்கை தொடர்பில் இன்று முடிவெடிக்க முடியாத நிலை, எதிர்காலத்தில் பார்ப்போம்”
மகிந்தவை பார்க்கச் சென்ற மேர்வின் சில்வா, ஊடகங்களுக்கு இப்படி குறிப்பிட்டுள்ளார்.