தங்கம் விலை தொடர் சரிவு: வெள்ளி விலையும் இன்று குறைந்தது! | Gold, Silver rate falls in Chennai

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.28) பவுனுக்கு ரூ.1200 குறைந்தது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

கடந்த ஜனவரியில் தொடங்கி தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிய தங்கம் விலை சாமான்ய மக்களின் கனவாக மாறிவந்த நிலையில், சமீப நாட்களாக சற்றே குறைந்து ஆறுதலும், நாமும் கொஞ்சம் தங்கமாவது வாங்கலாம் என்ற நம்பிக்கையையும் சாமான்யர்களுக்குக் கடத்தி வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.90.400-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை நிலவரம்:

அக்.28 ஒரு பவுன் ரூ.90,400

அக்.27 ஒரு பவுன் ரூ.91,600

அக்.26 ஒரு பவுன் ரூ.92,000

நன்றி

Leave a Reply