தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது | Gold Rate in Chennai reaches new record high

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் (அக்.6) பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்​யப்​பட்​டது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை – அக்.8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் நகை விலை அடிக்கடி புதுப்புது உச்சங்களைத் தொட்டுவரும் சூழலில் அக்.20 தீபாவளியை ஒட்டி தங்கம் விலை எந்த உச்சத்தைத் தொடுமோ என்று நகை வாங்குவோர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1400 உயர்ந்துள்ளது.

இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை நிலவரம்:

அக்.8 (புதன்) – ஒரு பவுன் ரூ.90,400

அக்.7 (செவ்வாய்) – ஒரு பவுன் ரூ.89,600

அக்.6 (திங்கள்) – ஒரு பவுன் ரூ.89,000

நன்றி

Leave a Reply