‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்: மதுரையில் இன்று தொடக்கம் | Nainar Nagendran TN Election Tour

சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் நயி​னார் நாகேந்​திரன், மதுரை​யில் இன்று சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். சென்​னை​யில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 6 மாதங்​களே உள்ள நிலை​யில், அனைத்​துக் கட்​சிகளும் தேர்​தல் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன. அதன்​படி, அதி​முக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள பாஜக​வும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை எதிர்​கொள்ள தீவிரம் காட்டி வரு​கிறது. இந்​நிலை​யில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் தமிழகம் முழு​வதும் நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதன்​படி, மதுரை​யில் இன்று (அக்​.12) தனது முதல்​கட்ட சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கு​கிறார்.

தொடர்ந்​து, 13-ம் தேதி சிவகங்​கை, 14-ம் தேதி செங்​கல்​பட்டு வடக்​கு, 15-ம் தேதி சென்னை வடக்​கு, 16-ம் தேதி மத்​திய சென்​னை, 24-ம் தேதி அரியலூர், பெரம்​பலூர், 25-ம் தேதி தஞ்​சாவூர் வடக்​கு, 27-ம் தேதி திருச்​சி, 28-ம் தேதி திண்​டுக்​கல் கிழக்​கு, 29-ம் தேதி நாமக்​கல் கிழக்​கில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். அடுத்​து, நவ.3-ம் தேதி ஈரோடு தெற்​கு, 4-ம் தேதி கோவை வடக்​கு, 5-ம் தேதி நீல​கிரி, 6-ம் தேதி திருப்​பூர் தெற்கு என தொடர்ந்​து, சேலம், தரு​மபுரி, தஞ்​சாவூர் தெற்கு என 28 நாட்​கள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் நயி​னார் நாகேந்​திரன் நவ.22-ம் தேதி தூத்​துக்​குடி தெற்​கில் நிறைவு செய்​கிறார். பின்​னர் இரண்​டாம்​கட்ட பயணத்தை தேனி​யில் நவ.24-ம் தேதி தொடங்​கு​கிறார்.

இதற்​கிடையே, சென்​னை​யில் திறந்த வாக​னத்​தில் பிரச்​சா​ரம் செய்​வதற்​குப் பதிலாக பொதுக்​கூட்​டங்​களாக நடத்த நயி​னார் நாகேந்​திரன் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply