தமிழ்நாடு MRB ஆட்சேர்ப்பு 2025 – 2147 காலியிடங்கள் || ரூ.19,500 சம்பளம்.. உடனே விண்ணப்பிக்கவும்! Tamilnadu MRB Recruitment 2025

Tamilnadu MRB Recruitment 2025: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது காலியாக உள்ள 2147 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) / துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, எவ்வாறு விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
(Tamil Nadu Medical Services Recruitment Board)
காலியிடங்கள் 2147
பணி கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) /
துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 14.12.2025
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://mrb.tn.gov.in/

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) / துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife) – 2147 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்குத் தகுதி பெற பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker) (பெண்) பயிற்சி வகுப்பு / துணை செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் (ANM) பயிற்சி வகுப்பை முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு குழுமத்தால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் (Certificate of Registration) பெற்றிருக்க வேண்டும்.
  • முகாம் வாழ்க்கைக்கான (Camp Life) உடல் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) (பெண்) பயிற்சி வகுப்பு / துணை செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் (ANM) பயிற்சி வகுப்பை முடித்து, S.S.L.C. (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களும் தகுதியுடையவர்கள்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Assistant Surgeon (General) பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • OC விண்ணப்பதாரர்களுக்கு – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 42 ஆண்டுகள்
  • SCA/ SC/ ST/ BC / BCM / MBC மற்றும் DNC விண்ணப்பதாரர்களுக்கு – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை
  • OC (DAP) விண்ணப்பதாரர்களுக்கு – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 52 ஆண்டுகள்
  • SC, ST, SCA, BC, BCM, MBC & DNC (DAP) விண்ணப்பதாரர்களுக்கு – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை
  • OC (முன்னாள் சேவை ஆண்கள்) விண்ணப்பதாரர்களுக்கு – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 59 ஆண்டுகள்
  • SC, ST, SCA, BC, BCM, MBC & DNC (முன்னாள் சேவை ஆண்கள்) விண்ணப்பதாரர்களுக்கு – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை

தமிழ்நாடு MRB ஆட்சேர்ப்பு 2025 பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பதவி பெயர் ஊதிய அளவு
கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) / துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife) Rs. 19,500 – 71,900/- சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (Tamil Nadu Medical Recruitment Board – MRB) 2025 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக்கான தேர்வு செயல்முறை கீழ்க்கண்ட இரண்டு முக்கிய நிலைகளை உள்ளடக்கியது:

1. தகுதிப் பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் வழங்கிய கல்வித் தகுதிகள் மற்றும் மதிப்பெண்கள் (Educational Qualifications and Marks) அடிப்படையில், MRB-யின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு எழுதாமல், அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பெரும்பாலும் இப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification – CV): தகுதிப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள். இந்தச் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த அனைத்து அசல் ஆவணங்களும் (கல்விச் சான்றிதழ்கள், பதிவுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், அடையாளச் சான்றுகள் போன்றவை) MRB அதிகாரிகளால் சரியாக உள்ளனவா என்று உறுதி செய்யப்படும்.

இந்த இரண்டு நிலைகளிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இறுதியாக பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • SC / SCA / ST / DAP(PH) / DW விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.11.2025 முதல் 14.12.2025 தேதிக்குள் https://mrb.tn.gov.in/ இணையதளத்தில் சென்று “New User” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
How to Apply Instruction PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply