IRCTC Hospitality Monitor Recruitment 2026: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பணியாற்றுவதற்கு Hospitality Monitors பதவிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 84 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு, மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும். இதற்கு எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை என்பதால், வேலை தேடும் புதியவர்கள் (Freshers) இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு நிறுவனத்தில் தங்கள் பணியைத் தொடங்கலாம். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IRCTC Hospitality Monitor Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) (Indian Railway Catering and Tourism Corporation) |
| காலியிடங்கள் | 84 |
| பணிகள் | Hospitality Monitors |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: | 25.04.2026, 27.04.2026 & 28.04.2026. (From 10.30 hrs to 17.30 hrs) |
| நேர்காணல் நடைபெறும் இடம்: | 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031 |
| பணியிடம் | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
irctc.co.in |
IRCTC Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள்) | 84 |
IRCTC Hospitality Monitor Recruitment 2026 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்:
- B.Sc. in Hospitality and Hotel Administration.
- BBA/MBA (Culinary Arts) – இந்திய சமையல் கலை நிறுவனங்களில் (ICI) பயின்றவர்கள்.
- B.Sc. Hotel Management and Catering Science.
- M.B.A (Tourism and Hotel Management) – UGC/AICTE அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள்.
வயது வரம்பு விவரங்கள்
| பணியின் பெயர் | வயது வரம்புகள் |
| Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள்) | 18 வயது முதல் 27 வயது வரை |
ரயில்வே IRCTC விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது.
| பிரிவு | வயது தளர்வு |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (General/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள்) பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 30,000/- வழங்கப்படும். மத்திய அரசு நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் கூடிய பணியைத் தேடிக்கொண்டிருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
IRCTC Hospitality Monitor Recruitment 2026 தேர்வு செயல்முறை
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- நேர்காணல் நடைபெறும் இடம்: 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031
- நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: 25.04.2026, 27.04.2026 & 28.04.2026. (From 10.30 hrs to 17.30 hrs)
IRCTC Hospitality Monitor Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துக் கல்விச் சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணலில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| நிகழ்வு | விவரம் |
| நேர்காணல் நடைபெறும் நாட்கள் | 25.04.2026, 27.04.2026 மற்றும் 28.04.2026 |
| நேரம் | காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை |
| நடைபெறும் இடம் | 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031 |



