தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி! – LNW Tamil

தமிழ் மக்களின் விடுதலைக்காக 12 நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஆகுதியான தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாநகர சபையின் சபை அமர்வு மேயர் வி.மதிவதனி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்பொது ஆரம்பத்திலேயே தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர சபை மேயர் சுடரேற்றியதைத் தொடர்ந்து சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேநேரம் இந்த இந்த அஞ்சலி நிகழ்வில் ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகாது அஞ்சலி நிகழ்வு நிறைவுற்ற பின்னர் சபை அமர்வில் பங்குகொண்டனர்.

நன்றி

Leave a Reply