திருகோணமலையில் நில அதிர்வு – Jaffna Muslim

திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. 

இன்று (18) மாலை சுமார் 4:06 அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலஅதிர்வு நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நில அதிர்வு அளவீடுகளாலும் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.  இந்த நிலஅதிர்வு அளவீடுகள் மஹகனதர, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. 

 நிலஅதிர்வு காரணமாக ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply