சென்னை: தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும் பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வந்ததால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் மது விற்பனையும் களை கட்டியது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று ரூ.235.94 கோடிக்கு மது விற்றது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.170.64 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சென்னை – ரூ.158.25 கோடி; திருச்சி – ரூ.157.31 கோடி; சேலம் – ரூ.153.34 கோடி; மதுரை – ரூ. 170.64 கோடி; கோவை – ரூ.150.31 கோடி என்ற அளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
