துப்பாக்கி சுட்டதால் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் – LNW Tamil




அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த கான்ஸ்டபிள் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதனையடுத்து அவர் பொலிஸ் வாகனத்தின் ஊடாக உடனடியாக சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எவ்வாறாயினும் அவருக்கு பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



நன்றி

Leave a Reply