தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு இன்று (25) காலை காலியில் உள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் பதவியேற்றார்.
தென் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பின் 154B பிரிவின்படி, நேற்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 0
