இலங்கையின் அரச அல்லது தனியார் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இதுவரை இல்லாத வகையில், மிகவும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட 4D Angio CT தொகுதி மற்றும் 10 நவீன கதிரைகளை உள்ளடக்கிய பல் மருத்துவப் பிரிவு என்பன ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் ஜப்பானிய அரசாங்கத்தின் ரூ. 1000 மில்லியனுக்கும் (1 பில்லியன்) அதிக நிதி நன்கொடையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
தெற்காசிய பிராந்தியத்திலேயே இத்தகைய அதிநவீன வசதி கொண்ட முதல் வைத்தியசாலையாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை மாறியுள்ளது. இது சிக்கலான சத்திரசிகிச்சைகள் மற்றும் நோய் நிர்ணயங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

