இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹனாம, தேசிய விளையாட்டு பேரவை (NSC) உறுப்பினர் பதவியில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.
2025 பெப்ரவரி 14 திகதியிட்ட கடிதம் மூலம் அவர், 2025–2028 காலகட்டத்திற்கு NSC உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேலும், 2025 பெப்ரவரி 20 அன்று அந்தப் பதவியை முறையாக ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் ஐசிசி போட்டி நடுவரான ரொஷான் மஹனாம, 2021 இல் கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.
2022 இல், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்ட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்தும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.