தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

இப்பருவகாலத்திற்கான MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 22 கட்டங்களை கொண்டதாக இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில் முதல் இரு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து பெஸ்ஸகி இப்பருவகாலத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது கட்டப்போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

20 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பமே இம்முறை பெட்ரோ கொஸ்டா சிறப்பாக செயற்பட்டு முன்னிலைப்பெற்றார்.

blank

அதேநேரம் ஒரு முடிவோடு களமிறங்கியுள்ள பெஸ்ஸகி மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.

அவர் இரண்டாமிடத்தில் போட்டியை தொடர 3மிடத்தில் மார்ட்டினும் தனது வேகத்தை அதிகரித்து முன்னிலைப்பெற சென்றுக்கொண்டிருசந்தார்.

எதிர்பாராத விதமாக கொஸ்டாவும் பெஸ்ஸகியும் பாரிய விபத்தை எதிர்கொள்ள இருந்தார்கள்.

இருந்தாலும் சிறப்பாக செயற்பட்ட பெஸ்ஸகி கொஸ்டாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார்.

மார்க் மார்க்கஸ் 4மிடத்தில் போட்டியை தொடர்ந்தார்.

6வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்திற்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. திடிரென போட்டியின் நிரல் பட்டியல் மாறத் தொடங்கியது.

ஒவ்வொரு வீரர்களும் முன்னிலைப்பெற தங்களது வேகத்தை அதிகரிக்க தொடங்கினார்கள். மார் மார்க்கஸ் 7ம் மிடத்திற்கு பின்தள்ளபட்டார். இன்னும் மோசமாக சென்று பின்னர் 11மிடத்திற்கு மார்க்கஸ் பின்னதள்ளப்பட்டார்.

13வது சுற்றில் வைத்து டியோஜியான்ன்டோனியோ சிறப்பாக செயற்படடு 4மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

அதேநேரம் 14வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்திற்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. மார்ட்டின் கொஸ்டா மாறி மாறி இரண்டாமிடத்ததை பெற்றுக்கொண்டனர்.

இம்முறையும் முதல் இடத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி சென்றுக்கொண்டிருந்தார் பெஸ்ஸகி,

15வது சுற்றில் வைத்து அகுரா தொழில்நுட்ப கோளாறு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

3 சுற்றுக்குள் எஞ்சியிருந்த நிலையில் சிற்ப்பாக செயற்பட்ட மார்க் மார்க்கஸ் 5 மிடத்திற்கு முன்னேறினார்.

இறுதியில் 20 சுற்றுக்களையும் 40 நிமிடங்கள் 50 செக்கன்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து அமெரிக்க குரோன்ப்ரீயையும் கைப்பற்றி இப்பருவகாலத்தின் தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

121 சுற்றுக்கள் வெற்றி தொடர்ச்சியாக 5வது வெற்றியென பெஸ்ஸகியின் சாதனை தொடர்கிறது.

blank

நன்றி

Leave a Reply