இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனவரி 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வருகை தந்துள்ளார்.
தமக்கு முறையான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து, ‘நாங்கள் சாவோமே தவிர இங்கிருந்து செல்ல மாட்டோம்’ என்ற உறுதியான வாசகங்களுடன் பட்டதாரிகள் இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த போராட்டத்தை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related