அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து புதன்கிழமை (30) மாலை ஆம்ஸ்டர்டாம் நோக்கி 275 பயணிகளுடன் பயணித்த டெல்டா விமானம் ஒன்று நடுவானில் கடுமையான குலுங்களை சந்தித்துள்ளது.
இதனால், விமானத்தில் பயணித்த பல பயணிகள் காயமடைந்தனர்.
அதேநேரம் விமானம், மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி விமானம் மாலை 7:45 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
காயமடைந்த 25 பயணிகள் சிகிச்சைக்காக உள்ளூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.