நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்” – திருகோணமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“அன்று பிர*பாகரனிடம் இருந்து புத்தர் சிலைகளை பாதுகாத்தோம், இன்று நவீன பிர*பாகரன்களாக உருவெடுத்துள்ள அரச தரப்பினரிடம் இருந்து சிலைகளை பாதுகாக்க போராடுகின்றோம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

📍 திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரையில் கடந்த 2025 நவம்பர் 16 அன்று வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கு, இன்று திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து பௌத்த சாசனத்தை அவமதித்து வருவதாகவும், பௌத்த பிக்குகளைக் கைது செய்து சிறையில் அடைப்பதையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சாடினார்.

“ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் உண்கின்றார், ஆனால் வடக்கிற்குச் செல்லும் பௌத்தர்களை இனவாதிகள் என முத்திரை குத்தி நிந்திக்கின்றார்” என குற்றம் சுமத்தினார்.

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் துரோகம் இழைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக:

• கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யகம்பத்

• மிகிந்தலை விகாரையின் நாயக்க தேரர்

• மத்திய மாகாண முன்னாள் ஆளுநர்

• ஏராளமான பௌத்த தேரர்கள் மற்றும் அரசியல்வாதிகள்

திருகோணமலையில் திரண்டிருந்தனர். இதனால் நீதிமன்ற சூழலில் பெரும் பரபரப்பு நிலவியது.

________________________________________

நன்றி

Leave a Reply