நான் 8 மாசம் வயிற்றில் இருக்கும்போதே, அப்பாவை கொண்டு போய்விட்டார்கள்

அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் இன்று (24) இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது.


நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டு போய்விட்டார்கள். நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக் கொண்டிருந்தோம் .அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை. இந்த அரசாங்கமாவது முன்வந்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என  கேட்டுக்கொள்கின்றேன்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தெல்லாம் கேட்டோம்,  அப்பாவை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம் விடவில்லை.


ஆனந்தசுதாகரனின் மகன் தெரிவித்துள்ளதாவது.


எனது அப்பா பிடிபட்டு 14 வருடங்களாகின்றது,நிறைய அரசியல்வாதிகளை சந்தித்து அப்பாவின் விடுதலை தொடர்பாக கதைத்தோம் இதுவரை எந்த முடிவும் இல்லை. இந்த அரசாங்கமாவது எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும்.

நன்றி

Leave a Reply