நாரம்மல பகுதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு! – Athavan News

நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர்.

சொரம்பல நோக்கிச் சென்ற லொரி, கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் மற்றும் ஒரு கல்வெர்ட்டில் மோதியதில் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, லொரியின் பின்னால் பயணித்த இருவர் வாகனத்தில் மோதி , நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் 26 மற்றும் 29 வயதுடைய வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply