CID க்கு வாக்குமூலம் வழங்க வரும் ரணில் கைது செய்யப்படுவார். இல்லாவிட்டால் தனது யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் சுதா அறிவித்துள்ளார். இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் என தயாசிறி ஜயசேகர Mp தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்,
யூடியுப் சுதாவின் இந்த பேச்சு, நீதிபதிகளை, சட்டத்துக்கு மேற்கொள்ளும் அழுத்தமாகும். சட்டத்தின் ஆதிபத்தியத்தை பாதுகாப்பதாகவே ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார். பாதுகாத்த முறைதான் இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வரக்கூடிய ஒருவரை, அவரை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் யூடியுப் அலை வரிசை நிறுத்துவதாக தெரிவிக்கும் அளவுக்கு யூடியுப் நடத்தக்கூடிய ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.