நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்புக்குரிய பணி இடம்பெறும். இதனை நாம் நிச்சயம் செய்வோம். இதற்கு எமக்கு கால அவகாசம் அவசியம். NPP யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு உறுதிமொழிக்கும் நாம் நிச்சயம் பொறுப்புகூறுவோம். முதலில் தள்ளாடும் நிலையில் உள்ள பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டும். மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும். ஊழல், மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. புதிய தேர்தல் முறைமை உருவாக வேண்டும். நிபுணர்கள் மற்றும் மக்களின் கருத்துகளை உள்வாங்கி அரசமைப்பு தயாரிக்கப்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
– ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா –