ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2021-22-ம் ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் 12 படகுகளை விடுவித்து நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
இதையடுத்து, இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 12 படகுகளின் தற்போதைய நிலையைப் பார்வயிட்டு, அவற்றை மீட்டுக் கொண்டு வருவதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் குழுவினர் இன்று (ஆக. 25) விசைப்படகில் புறப்பட்டுச் செல்கின்றனர்.