நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், இன்று (25) காலை பதிவான தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த வெப்பநிலையே காணப்பட்டது.

இதன்படி பண்டாரவளையில் 14.0°C, பதுளையில் 17.5°C மற்றும் கடுகஸ்தோட்டையில் 19.7°C என பதிவாகியுள்ளது.

மலைநாட்டிற்கு நேர்மாறாக, கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் ஓரளவு வெப்பமான வானிலை நிலவியது.

இதன்படி முல்லைத்தீவில் 27.4°C பதிவாகியுள்ளதுடன், கொழும்பில் 26.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தற்போதைய வானிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருவதுடன், மலைநாட்டிற்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிலவும் கடும் குளிருக்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

The post நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

நன்றி

Leave a Reply