வலப்பனை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாரிய விபத்தை சந்திக்கவிருந்த நிலையில், சாரதியில் துணிச்சலான நடவடிக்கையினால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நில்தண்டாஹினையில் இருந்து தெரிபஹா வரையிலான ராசிங்கொல்லவில் உள்ள முதல் வளைவில் விபத்துகுள்ளாகவிருந்தது.
எனினும், சாரதி துரிதமாக செயற்பட்டு விபத்தை தடுத்திருந்தார். சாரதியில் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டிட்வா பேரிடரின் போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருந்த வீதியின் வளைவில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
எனினும், பேருந்து சாரதி துரிதமாக செயற்பட்டு விபத்தை தடுத்திருந்தார். இது குறித்து பேருந்தின் சாரதியான சமன் திலகசிறி கருத்து வெளியிடுகையில்,
“இன்று காலை, பேருந்து நில்தண்டாஹினைலிருந்து தெரிபஹாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வீதியில் உள்ள ராசிங்கொல்ல பகுதியில் உள்ள முதல் வளைவில் பாரிய சத்தம் கேட்டது.
நான் பிரேக்குகளை அழுத்தி பேருந்தை நிறுத்தினேன். பேருந்தில் இருந்து பார்த்த போது கீழே 50 அடி சரிவில் இருந்த ரூபாஹா வீதி தெரிந்தது.
இதன் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.
நான் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கும்போது, பேருந்தின் இணைப்பு இரண்டாக உடைந்திருந்தது.
நான் பணிமனைக்கு இது குறித்து அறிவித்திருந்தேன். பணிமனையிலிருந்து வந்து பேருந்தில் புதிய இணைப்பு போட்டனர். பேருந்து எடுக்கப்படும் வரை வீதி மூடப்பட்டிருந்தது.
நான் சுமார் 15 ஆண்டுகளாக வலப்பனை பணிமனையில் சாரதியாக பணியாற்றி வருகிறேன். நான் கேகாலைச் சேர்ந்தவன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
பேருந்து விபத்துக்குள்ளான இடம் டித்வா பேரிடரால் நிலச்சரிவு ஏற்பட்ட இடம். “வீதி இன்னும் சரியாகப் பழுதுபார்க்கப்படவில்லை. அந்தப் பாதையில் பேருந்துகளை நிறுத்துவது மிகவும் கடினம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
