நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?

திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை ரசிக்கும் பாரம்பரிய காலம் மாறி, இன்றைய காலத்தில் வீட்டிலேயே குடும்பத்துடன் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்களை பார்ப்பது வழக்கமாகி வருகிறது.

மொழிகளுக்கான தடைகளை சப்டைட்டில்கள் மற்றும் டப்பிங் முறைகள் எளிதாக்கியுள்ளதால், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிப் படங்களையும் பார்வையாளர்கள் எளிதில் அணுகி ரசித்து வருகின்றனர்.

இதனிடையே, உலகளாவிய அளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் நெட்பிளிக்ஸ், இந்திய திரைப்படங்களின் பார்வையாளர் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களை வெளியிட்டுள்ளது.

1.ஆர்.ஆர்.ஆர்(RRR): ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய இப்படம் நெட்பிளிக்ஸில் 43.65 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

2. ஜவான்( Jawaan) – ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் திரைப்படமான இது 31.90 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

3. கங்குபாய் கதியாவாடி(Gangubai Kathiawadi): ஆலியா பட் நடித்த இந்தப் படம் நெட்பிளிக்ஸில் 29.64 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

4.லாபதா லேடீஸ்(Laapataa Ladies): கிரண் ராவின் இந்தப் படம் நெட்பிளிக்ஸில் கிட்டத்தட்ட 29.50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

5.அனிமல்(Animal): ரன்பீர் கபூர் நடித்த இந்தப் படம் நெட்பிளிக்ஸில் 29.20 மில்லியன் பார்வைகளை கடந்தது.

6.க்ரூ(Crew): தபு, கரீனா கபூர் கான் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்த இந்தப் படம் 27.90 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

7. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா(Maharaja) திரைப்படம் நெட்பிளிக்ஸில் 27.10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

8. பைட்டர்(Fighter): ஹிருத்திக் ரோஷனின் இந்த படம் நெட்பிளிக்ஸில் 26.30 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

9. லக்கி பாஸ்கர்(Lucky Bhaskar): துல்கர் சல்மான் நடித்த இந்த படம் கிட்டத்தட்ட 26.30 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

10.ஷைத்தான்(Shaitaan): அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனின் சூப்பர்நேச்சுரல் திரில்லர் 24 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

நன்றி

Leave a Reply