நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு

 

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம்  இடம்பெற்றுள்ள நிலையில்  சந்தேகத்திற்கிடமான  மூவரை  காவல்துறையினர் கைது செய்துள்னளர். பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நோர்வே காவல்துறையினா் அப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல்   நடத்திய போது அங்கு வெடிக்காமல் காணப்பட்ட  கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்துள்ளனர். அத்துடன் அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம்  இடம்பெற்ற  இடம், தற்போது முழு   கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும்  பிஸ்லெட் ஸ்டேடியத்தில் இருந்து கார் ஒன்று சந்தேகத்துக்கிடமாக சென்றதாகவும்   காரில் இருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாகவும்  சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியுள்ள நிலையில்    விசாரணைகள்  தொடர்கின்றன. .

இதேவேளை குண்டுகள் வெடித்த பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும்  அப்பகுதி மக்களை  காவல்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நன்றி

Leave a Reply