38
குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங்குவதில்லை. ஆனால், அவசரமாக வந்து பல மணிநேரம் தங்கியிருந்து தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவார்.
‘ஹசினி’ என்ற பெண்ணும் அங்கு வந்து தங்குவதாகக் குறிப்பிட்ட தேரர், அந்த கிராமத்து மக்களுக்கே இப்படியொரு அறை இருப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அந்த விகாரையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
________________________________________
