பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் சிக்கி 21 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்லாமாபாத்துக்கு அருகில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் இலங்கை, பாக்கிஸ்தான் கிரிக்கட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் குண்டுவெடிப்பு நடந்த மறுதினமான இன்று இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
