பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக வனயீர்ப்பு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் நீதி நியாயம் கோரி தொடர்ந்து 1245 வது நாள் நியாய பயணம் என்ற தொனிப்பொருளில் அநீதிகள் படுகொலைகளுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு பெண்கள் அமைப்பினர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று பாலஸ்தீனம் காசா யுத்தம் ஆரம்பித்து மூன்று வருட நினைவை முன்னிட்டு பெண்கள் நியாய பயணம் அமைப்புடன் கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள செபஸ்தியார் ஆலயத்தின் முன்னாள் பெண்கள் ஒன்று சேர்ந்தனர்.
அதனை தொடர்ந்து அங்குள்ள காந்தி சிலையில் காந்தியின் மேல் பலஸ்தீன அடையாளம் கொண்ட துணியால் அவரது உடலை போர்த்து கொண்டதுடன் தலைக்கு மேல் குடை ஒன்றை பொருத்திய பின்னர் ” யுத்தத்தின் வேதனை அறிந்தவர்கள் நாம், இந்த வேதனை எங்கும் தொடரக்கூடாது, நாளைய மழலைகள் பலி ஆகக் கூடாது என்பதே எமது வேண்டுதல். எங்கேயோ கேட்ட வை ” என குரல் எழுப்பிக் கொண்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.