பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய இலங்கை

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்றுள்ளது. 

இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, இலங்கை தனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கான யோசனை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று (12) நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கை உட்பட 142 நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாகவும் 10 நாடுகள் எதிராகவும் தமது வாக்கை வழங்கியுள்ளன.

நன்றி

Leave a Reply