கடந்த காலங்களில் ஐ.நா சபையில் இயற்றப்பட்ட பாலஸ்தீனத்தின் உரிமைக்கான முன்மொழிவுகளுக்கு இந்தியா பல முறை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே வேளையில், இஸ்ரேலுடனும் நல்ல நட்புறவில் இருந்தது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நாட்டினால் 55,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், இந்தியா எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் மவுனமாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
இந்நடவடிக்கை இந்திய பிரதமர் மோடியின் தனிப்பட்ட உறவு சார்ந்ததாக இருக்கிறதே தவிர, இந்திய அரசியலமைப்பின்படி இல்லை. உலக நாடுகள் ஐ.நா.வில் இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்து வரும் இந்த சூழலிலாவது பாலஸ்தீன மக்களின் பிரச்சனையை முதன்மையாக கருதி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோனியா காந்தி