‘பாஸ்டேக்’ இல்லாவிட்டால் யுபிஐ பயனர்களுக்கு சலுகை: 1.25 மடங்கு செலுத்தினால் போதும்  | Non-FASTag users to pay more in cash, less via UPI

புதுடெல்லி: ​பாஸ்​டேக் இல்​லாதவர்கள் யுபிஐ பயன்படுத்தினால், வழக்​க​மான கட்​ட​ணத்​தில் 1.25 மடங்கு செலுத்தினால் போதும் என்று மத்​திய சாலைப்​போக்​கு​வரத்து, நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகள், விரைவுச் சாலைகளில் உள்ள 1,150 சுங்​கச்​சாவடிகளில் தடை​யின்றி பயணிக்க ஏது​வாக பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் வசதியை இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் (என்​எச்​ஏஐ) கடந்த சுதந்​திர தினத்​தின்போது அறி​முகப்​படுத்​தி​யது. அன்​றைய தினம் மட்​டும் 1.40 லட்​சம் வாகன ஓட்​டிகள் இந்த வரு​டாந்​திர பாஸை வாங்​கினர். இதையடுத்து, வரு​டாந்​திர பாஸ் திட்​டத்​துக்கு வாகன ஓட்​டிகளிடம் நல்ல வரவேற்பு காணப்​பட்டது.

இந்த நிலை​யில், பாஸ்​டேக் இல்​லாத வாக​னங்​கள் நவம்​பர் மாதம் முதல் 1.25 மடங்கு கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. உதா​ரணத்​துக்கு, பாஸ்​டேக் வைத்​திருக்​கும் ஒரு​வர் ரூ.100 சுங்க கட்​ட​ணம் செலுத்​து​வார் என்றால், அவர் ரொக்​க​மாக செலுத்​தும்​போது ரூ.200 கட்​ட​ணத்தை செலுத்த வேண்​டி​யிருக்​கும். அதே​நேரம், யுபிஐ வசதியை பயன்​படுத்​தி​னால் ரூ.125 கட்​ட​ணம் (1.25 மடங்​கு) செலுத்​தி​னால் போதும்.

டிஜிட்​டல் பரிவர்த்​தனையை ஊக்​குவிக்​க​வும், கட்டண வசூல் செயல்​முறையை வலுப்படுத்​த​வும், சுங்க வசூலில் வெளிப்​படைத்​தன்​மையை மேம்படுத்​த​வும், தேசிய நெடுஞ்​சாலை பயனர்​களின் பயணத்தை எளி​தாக்​கு​வதை​யும் முக்கிய நோக்​க​மாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சகம் தெரி வித்துள்ளது.

நன்றி

Leave a Reply