பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே – ஞானசார தேரர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இரு தரப்பினர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒருபோதும் மறக்க முடியாத அரச தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.

நாம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தாலும், அவர் நம் வாழ்வில் நாம் கண்ட ஒரு மாவீரர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நமது முழு இளைஞர்களும் போரினால் பாதிக்கப்பட்டனர்.

போர் மற்றும் மரண பயமாக இருந்த ஒரு காலத்தில், துட்டுகேமுனு மன்னரைப் போன்று நாட்டை மீட்ட ஒருவராவார்.

போர் மனநிலையைக் கொண்டிருந்த மற்றும் நாட்டைப் பிரிக்க முயன்ற சக்திகள், சுமார் 30 ஆண்டுகளாக நாட்டை அச்சுறுத்தி வந்த விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நாடு பிரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் சில தமிழ்ப் பிரிவுகள் இந்த உலகில் வாழும் வரை, ராஜபக்சக்கள் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply