பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்!

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மனிதகுலத்திற்கு எதிரான மூன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

“போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்று அழைக்கப்படும் அவரது காலத்தில் குறைந்தது 76 பேரின் கொலைகளில் அவர் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து நெதர்லாந்தில் உள்ள ஒரு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், திங்களன்று (22) சர்வதேச நீதிமன்றத்தினால் வெளியிட்ட ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

டுடெர்ட்டே ஜனாதிபதியாக இருந்தபோது அவர் தலைமையிலான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் விளைவாக ஆயிரக்கணக்கான போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பயனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், டுடெர்ட்டே மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு, 2013 மற்றும் 2016க்கு இடையில் டாவோ நகரில் மேயராக இருந்தபோது 19 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பானது.

ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகள், அவர் 2016 மற்றும் 2022 க்கு இடையில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாகபணியாற்றிய காலங்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான போர் என்று அழைக்கப்பட்ட காலங்கள் தொடர்பானது.

6,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அவரது கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அவர் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானதாக இருக்கலாம் என்று ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.

நன்றி

Leave a Reply