பீஹார் சட்டசபை தேர்தல் திகதியை இன்று(06) மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய சனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் திகதி முதல் ஒகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதை அடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஒரு காலத்தை அரசியல் கட்சியினர் வலியுறுத்தியிருந்த நிலையில் பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பொருத்தமான திகதியை இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.