புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரப் படுகொலை தொடர்பான விசாரணைகளில், முக்கிய முன்னேற்றமாக இரண்டாவது சந்தேகநபரை ஊர்காவற்றுறை காவற்தறையினர் இன்று (21) கைது செய்துள்ளனர்.
கடந்த 2025 ஓகஸ்ட் மாதம், தனியார் பேருந்து உரிமையாளரான அகிலன் என்பவர் இனந்தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர், கடந்த செப்ரெம்பர் 14 அன்று முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முதலாவது சந்தேகநபர் வழங்கிய இரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த 5 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பலனாக, புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply