சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சுரங்க பணிகள் தொடங்கினால், எங்களது வனம், நீர் வளம், நிலம் ஆகியவை அழியும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதுடன் அதிகாரிகள் யாரையும் கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தரம்ஜாய்கர் என்ற பகுதியில் புரங்கா கிராமம் அருகே அதானி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைக்கவுள்ளது.
இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
