பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply