பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு அனுப்பப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அத்தகைய மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்படும் செய்திகள் இலங்கை பொலிஸ் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் அனுப்பும் செய்திகள் அல்ல.
அவை தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கொள்ள வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
இந்த போலி மின்னஞ்சல் செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.