மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்! – Lanka Truth | தமிழ்

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அந்தவகையில் இந்தியாவின் கவுகாத்தியில் Guwahati இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

1973-ம் ஆண்டு அறிமுகமான மகளிர் உலகக் கிண்ணம் , நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 13-வது பதிப்பை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. போட்டிகள் நவம்பர் 2 வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் கொழும்பில் நடைபெறும்.

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தர மறுத்ததால், அதன் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா (தற்போதைய சம்பியன்), இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் பின் முதல் -4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்றுவரை இரு அணிகள் மோதிய 35 ஒருநாள் ஆட்டங்களில், இந்தியா 31 முறை வென்றுள்ளது. இலங்கை 3 முறை வென்றுள்ளதோடு ஒரு போட்டி சமனிலையில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2

நன்றி

Leave a Reply