மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைய இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான ஜே. ஜே. முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபராக பணியாற்றி வருகின்றார்.
இந்தநிலையில், அவர் (26.09.2025) முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இதனடிப்படையில், தற்போது ஜே. எஸ். அருள்ராஜை அரசாங்க அதிபராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.