தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவித்துள்ளது.
அதேவேளை கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இஸ்ரேல் மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்