மனித நேயம்

இந்தியா  – கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசை,  குமரி மாவட்ட கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் முதன்மை மதகுரு.


இனயம் ஜமாஅத் முன்னாள் தலைவர்  ஏ.எஸ்.ஹமீது 26-10-2025 அதிகாலை வபாத் ஆகி, மாலை ஐந்து மணிக்கு ஜனாஸா அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த வேளையில் மரண வீட்டின் முன்புறம் வந்துநின்ற வாகனத்தில் இருந்து கோட்டாறு பிஷப் தனது உதவியாளர்களுடன் இறங்கி வீட்டுக்குள் வந்தார்.


ஜனாஸா குளிப்பாட்டி கொண்டு  வந்து உடல் கஃபன் பொதிவது முழுவதும் அருகில் நின்று பார்த்த பிஷப்,  ஜனாஸாவைப் பின்தொடர்ந்தது சுமார் அரை கி.மீ தூரம் பள்ளிவாசல் வரை நடந்து வந்தவர், ஜனாஸா தொழுகை நடந்து முடிவது வரை ஓரமாக நின்றதுடன், ஜனாஸா அடக்கம் செய்யும் இடம் வரை வந்து ஒருபிடி மண் தனது கையால் எடுத்து கொடுத்து அடக்கம் முடிவது வரை அங்கிருந்து விட்டு திரும்பி சென்றது நெகிழ்வான காட்சிகள்.


நடந்து செல்லும் வழியில் பிஷப் அவர்களிடம் பேசினேன்.


இருவருக்குமான நட்பு முப்பது ஆண்டுகளுக்கு மேலானது என்று கூறிய பிஷப்,  ஏ.எஸ்.ஹமீது அவர்கள் இனயம் ஜமாஅத் தலைவராக இருந்த நேரத்தில், இனயம் பங்குதந்தையாக பொறுப்பு வகித்த போது துவங்கிய நட்பு தற்போது வரை தொடர்வதாகவும்,


ஏ.எஸ்.ஹமீது தனது பிள்ளைகள் திருமணங்களின் போது தேடி வந்து அழைப்பதும், பண்டிகை நாட்களில் விருந்து பரிமாறுவது உட்பட நெருக்கமான நட்பை பேணியவர் என்றும் தெரிவித்தார்.


இன்றைய ஞாயிற்றுக்கிழமை தனது பிஸியான மாலை நேர ஆராதனை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டு இஸ்லாமிய நண்பர் நல்லடக்கம் நிகழ்ச்சியில் கலந்து சிலமணி நேரம் செலவழித்த பிஷப் அவர்கள் செயல் போற்றுதலுக்குரியது.

Colachel Azheem

நன்றி

Leave a Reply